தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 108 பால்குடம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆஞ்நேயருக்கு பால் மற்றும் 11 வகையான அபிஷேகங்களும் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அனுமனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.