தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் சுமார் 300 ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட சம்பா தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. வாரிவாய்க்கால் சரிவர தூர்வாராததால் ஒரு ஆள் உயரத்திற்கு மழைநீர் நிரம்பி வயலுக்குள் புகுந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.மேலும் தனிநபர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.