திருச்சி மாவட்டம் ஸ்ரீராம சமுத்திரம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சாலையின் குறுக்கே வேப்ப மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து தடைபட்டது. மரம் விழுந்ததால் ஸ்ரீராம சமுத்திரம் வழியாக பேருந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு காட்டுப்புத்தூரில் உள்ள பள்ளியில் அரசு தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளை எதிர்பார்க்காமல், தாங்களே மரத்தை வெட்டி அகற்றி மாணவர்களை தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.