செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரியில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டியதால் விமானப்படை நிறுவனத்தில் சிறப்பு அனுமதி பெற்று ஹெலிகாப்டர் சவாரி நடைபெற உள்ளதாக ஏரோ டான் ஹெலிகாப்டர் நிறுவனம் கூறியுள்ளது.