சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து விழுப்புரத்தில் சென்று கொண்டிருந்த போது டீசல் டேங்கில் ஓட்டை விழுந்து 100 லிட்டருக்கு மேல் டீசல் சாலை முழுவதும் கொட்டியது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சாலை முழுவதும் பரவி கடந்த டீசல் மீது நுரையை தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.