சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் புனித அருளானந்தர் ஆலய தேர் பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வண்ண மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் அருளானந்தர் மற்றும் அன்னை மாதா சொரூபங்கள் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இந்த பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.