திருவண்ணாமலை அருகே வீட்டில் பொருட்களை சேதப்படுத்தியதோடு, தங்க சங்கிலியை பறித்து சென்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாணியதாங்கலை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் வீடு புகுந்து பெருட்களை சேதப்படுத்தி, அவரது மருமகள் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலியை, ஒரு கும்பல் பறித்து சென்றதாக கூறப்படுகிறது.