கோவாவிற்கு திருமணத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட புகைப்படம் எப்படி வெளியே வந்தது என கேள்வி எழுப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது குறித்து நடவடிக்கை எடுக்க விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, போகிறவர்கள், வருகிறவர்களை போட்டோ எடுப்பது தான் மாநில உள்துறையின் வேலையா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இந்தி தெரியாது போடா என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினுக்கு அமித்ஷா பேசியதில் என்ன புரிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.