தமிழர்களை பார்த்து காட்டுமிராண்டி என சொல்கிறார் என்றால் என்ன கொழுப்பு இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சர் துரைமுருகன் வறுத்தெடுத்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாவை அடக்கி பேசுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் 100 முறை கும்பிட்டு மன்னிப்பு கேட்டதாக பெருமையுடன் தெரிவித்தார்.