ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு அடாவடித்தனமாக வசூல் வேட்டை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தை பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டு கோவைக்கு சென்று வந்தவர் வாகனத்தை எடுத்த போது ஒரு கும்பல் ரசீது கொடுத்து பணம் கேட்டு மிரட்டியது. பணம் கொடுக்க மறுத்து அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த கும்பல் பெண்ணை தரக்குறைவாக பேசியுள்ளது. இந்த வீடியோ வெளியான நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.