தஞ்சாவூரில், பாலத்தில் அமர்ந்திருந்த இளைஞரை சுத்துப்போட்டு வெட்டப் பாய்ந்த கும்பல். சமாதானம் செய்யச் சென்ற தந்தையை கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டம். கொலை சம்பவத்தில் ஈடுபட்டது எதிர் வீட்டுக்காரன் என தகவல். காவல்நிலையத்தில் சரணடைந்த மூன்று பேரை கைது செய்து விசாரணை. முதியவரை வெட்டிக் கொன்றது ஏன் ? நடந்தது என்ன?வீட்டுக்கு பக்கத்துல உள்ள ஒரு பாலத்துல உட்காந்து இருந்துருக்காரு இளைஞர் விவேக். அப்ப திடீர்ன்னு அங்க வந்த 4 பேர் கொண்ட கும்பல் விவேக்க வெட்ட பாய்ஞ்சுருக்காங்க. இதபாத்து பயந்து போன விவேக் வீட்டுக்குள்ள தப்பிச்சு ஓடிட்டாரு... அந்த நேரத்துல விவேக்கோட அப்பா மூர்த்தி, அந்த கும்பல தடுத்து பேச்சுவார்த்தையில ஈடுபட்டிருக்காரு. அப்ப விவேக் மேல இருந்த கோபம் அப்படியே முதியவர் மூர்த்தி மேல திரும்பிருக்கு. இதனால மூர்த்திய சரமாரியா வெட்டிப்போட்ட கும்பல் அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க.மூர்த்தி சடலமா கிடந்தத பாத்து அவரோட மனைவி, மகன், சொந்தக்காரங்கன்னு எல்லாரும் கத்திக் கதறி அழுதுருக்காங்க. இதுக்கிடையில நடுக்காவிரி போலீஸ் ஸ்டேஷன்க்கு போன மூணு பேரு சார் நாங்க தான் மூர்த்திய வெட்டிக் கொன்னோம்ன்னு சொல்லி சரணடைஞ்சுருக்காங்க. அதுக்கடுத்து அவங்கள கஸ்டடியில எடுத்து விசாரிச்சப்ப தான் இந்த கொலைக்கான முழு காரணமும் போலீஸ்க்கு தெரிய வந்துச்சு.தஞ்சை மாவட்டத்துல உள்ள அல்சக்குடி கிராமத்த சேந்த மூர்த்தியோட மகன் விவேக். விவசாய கூலி தொழிலாளியான விவேக்குக்கு கல்யாணம் ஆகல. இவரோட எதிர் வீட்ல அருண்குமார்-ங்குற நபரு வசிச்சுட்டு இருக்காரு. இவருக்கு கல்யாணமாகி கவுசல்யா-ங்குற மனைவி இருக்காங்க. குடும்ப கஷ்டத்துக்காக அருண் வெளிநாட்டுக்கு போய்ட்டு வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. நல்லபடியா வேலை பார்த்து, சம்பாதிக்குற பணத்த மாசம் மாசம் மனைவிக்கு அனுப்பி வந்தாரு. இதுக்கிடையில எதிர் வீட்ல இருந்த விவேக், கௌசல்யா கூட பேச ஆரம்பிச்சுருக்காரு. ஆரம்பத்துல நார்மலா பேச ஆரம்பிச்ச ரெண்டு பேரும் அதுக்கடுத்து க்ளோஸா பழகவும் ஆரம்பிச்சுருக்காங்க. இந்த பழக்கமே இவங்களுக்குள்ள தகாத உறவா மாறிருக்கு. விவேக்கோட நடவடிக்கையையும், கௌசல்யாவோட நடவடிக்கையையும் நோட் பண்ண சொந்தக்காரங்க, ரெண்டு பேருக்கும் அட்வைஸ் பண்ணிருக்காங்க. ஆனா, ரெண்டு பேரும் அத கேட்குற மாதிரி தெரியல.இதுக்கிடையில மூணு மாசம் கழிச்சு அருண்குமார் லீவுக்காக சொந்த ஊருக்கு திரும்பிருக்காரு. அப்ப மனைவி அடிக்கடி யார் கிட்டையோ ஃபோன் பேசுனத நோட் பண்ண அருண்குமார், அவங்ககிட்ட இருந்த செல்போன பிடுங்கி பாத்துருக்காரு. அப்ப கௌசல்யா, விவேக்கூட அடிக்கடி பேசியிருந்தத பாத்த அருண்குமார் கடும் கோபத்துக்கு உள்ளாகிருக்காரு.உனக்காக கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு போய் சம்பாதிச்சு போடுறேன், ஆனா நீ இங்க எவன் கூடவோ பழகிட்டு இருக்கியா, உன்னால என் மானமே போய்ருச்சு, இதே மாதிரி பண்ணிட்டு இருந்தனா, உன்னை வீட்டை விட்டு தொறத்தி விட்ருவேன்னு மிரட்டிருக்காரு. அதே மாதிரி விவேக்கோட வீட்டுக்கு போய்ட்டும் மிரட்டிருக்காரு அருண்குமார். அப்ப ரெண்டு பேருக்கு இடையில பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு.ஆனா, ரெண்டு பேரும் அருண்குமாரோட பேச்ச கேட்குற மாதிரி தெரியல. இதனால அருண்குமார் தன்னோட நண்பர்கள் கிட்ட எல்லாத்தையும் சொல்லி விவேக்க கொலை செய்ய திட்டம் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு விவேக் வீட்டுக்கு பக்கத்துல உள்ள பாலத்துல உட்காந்துட்டுஇருந்தாரு. அப்ப அங்க வந்த அருண்குமார், தமிழரசன், முத்தமிழ்செல்வன், பாலசுப்பிரமணியன் அவர சுத்துப்போட்டு வெட்டப் பாய்ஞ்சுருக்காங்க.அப்ப சுதாரிச்சுக்கிட்ட விவேக், தன்னோட வீட்டுக்குள்ள ஓடிப் போய்ட்டாரு. விவேக்கோட அம்மா கதவ அடைச்சுட்டாங்க. அந்த நேரத்துல சமாதானம் பேச விவேக்கோட அப்பா மூர்த்தி வந்துருக்காரு. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் இப்ப திரும்பி போய்ருங்கன்னு சொல்லிருக்காரு.அதுக்கு உன்ன வெட்டுனா உன் மகன் வீட்டுக்குள்ள இருந்து வெளிய வருவான்னு சொன்ன கும்பல், மூர்த்திய சரமாரியா வெட்டிருக்காங்க . இதுல நிலை குலைஞ்ச மூர்த்தி சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்து உயிரிழந்துட்டாரு.அதுக்கடுத்து அந்த கும்பல் அங்கருந்த தப்பிச்சு போய்ட்டாங்க. மறுநாள் முத்தமிழ்செல்வன், தமிழரசன், பாலசுப்பிரமணியன்-ங்குற மூணு பேரு போலீஸ் ஸ்டேஷன்ல சரணடைஞ்சுட்டாங்க. தலைமறைவா இருக்குற அருண்குமார போலீஸ் வலைவீசி தேடிட்டு இருக்காங்க...