அதானியுடன் தமிழக அரசை இணைத்து பேசி, பாமகவினர் திமுக அரசுக்கு களங்கம் விளைவிக்க நினைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், அதானியை தான் சந்திக்கவில்லை எனவும், அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்கள் குறித்து எழும் வதந்திகளுக்கும், தவறாக கருத்துகளுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார் எனவும் கூறினார். மேலும், அதானியை வைத்து திமுக அரசை குறைகூறும் பாஜகவும், பாமகவும் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து அதானி குறித்து விவாதிக்க குரல் கொடுக்க தயாரா எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.