புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎமின் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன், உடல்நலக்குறைவால் காலமானார். ஏவிஎம் சரவணன் இன்று காலமான நிலையில், அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுவை அரசின் பண்பின் சிகரம் விருது ஆகியவற்றை பெற்றுள்ள அவர், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.வயது மூப்பு காரணமாக, காலமான திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவர் மறைவெய்தியது மிகுந்த வருத்தம் அளிப்பதாக தனது இரங்கல் பதிவில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அமைதியும், எளிமையும் கொண்டு, எல்லோரிடமும் அன்பொழுக பழகிய அவரது மறைவால் வாடும் ஏவிஎம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்து கொள்வதாக முதல்வர் பதிவிட்டுள்ளார். நேற்று தனது 86வது பிறந்தநாளை கொண்டாடிய ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமான நிலையில், அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.