கோவில் உண்டியலில் ஐபோனுக்கு பதில் வெடிகுண்டை தூக்கிப் போட்டிருந்தால் கோவிலுக்கு சொந்தம் எனக் கூறி வைத்திருப்பீர்களா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பித்தர முடியாது என மறுப்பது எந்த விதத்தில் நியாயம் என வினவினார்