சேலம் பழைய பேருந்து நிலைய கடை வீதி பகுதியில் சட்டவிரோத லாட்டரி விற்பனை செய்தவர்களை செய்தியாளர்கள் சுற்றி வளைத்த நிலையில், கையும் களவுமாக சிக்கிய கும்பல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. லாட்டரி டிக்கெட்டுகள், வசூலான பணம் என எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு லாட்டரி விற்பனையாளர்கள் ஓட்டம் பிடித்த நிலையில், நீண்ட நாட்களாக சட்டவிரோத லாட்டரி விற்பனை நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த போலீசார் லாட்டரி சீட்டுகளையும், பணத்தையும் உள்ளேயே வைத்து பூட்டி விட்டு சென்றனர்.