மகனை காணவில்லை என, காவல் நிலையத்தில் புகார் அளித்த தாய். மிஸ்ஸிங் கேஸ் லிஸ்ட்டை எடுத்து விசாரித்த போலீஸ். சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை. முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த மனைவி மீது சந்தேகமடைந்த போலீஸ். கணவனை வெட்டிக் கொலை செய்துவிட்டு சடலத்தை, ரயில்வே தண்டவாளத்தில் வீசியதாக பகீர் வாக்குமூலம் அளித்த மனைவி. கட்டிய கணவனை மனைவியே கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?ரயில்வே தண்டவாளம் வழியா இளைஞர்கள் சிலர் நடந்து போய்ட்டு இருந்தாங்க. அப்ப அடையாளம் தெரியாத ஒரு இளைஞரோட சடலம் கிடந்துருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்சு இளைஞர்கள், இதபத்தி தங்களோட கிராமத்து மக்கள் கிட்ட சொல்லிருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் இளைஞரோட சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து உயிரிழந்த இளைஞர் பத்தி கிராம மக்கள் கிட்ட கேட்ருக்காங்க. ஆனா கிராம மக்கள், இந்த இளைஞர் யாருன்னு எங்களுக்கு தெரியலன்னு சொல்லிட்டாங்க. இதனால போலீஸ் பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேஷன்ல ஏதும் மிஸ்ஸிங் கேஸ் ஃபைல் ஆகிருக்கான்னு பாத்துருக்காங்க. ஆனா அதுல எந்த ஒரு துப்பும் கிடைக்கல. இதனால அந்த சடலத்தோட புகைப்படம் எடுத்த போலீசார் அந்த போட்டோவ பக்கத்து மாவட்டத்துல உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும் அனுப்பி வச்சு விசாரிக்க சொல்லிருக்காங்க. அப்ப கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன்ல தேவா-ங்குற இளைஞர காணும்ன்னு அவங்க தாய் சுசிலா புகார் அளிச்சுருந்தது தெரியவந்துருக்கு.இதனால சுசிலாவ கூப்டு சடலத்த அடையாளம் காட்டிருக்காங்க போலீஸ். அதுல தான் உயிரிழந்தது தேவான்னு கன்பார்ம் ஆகிருக்கு. மகனோட சடலத்த பாத்து கதறி அழுத தாய், தேவாவோட உயிரிழப்புல சந்தேகம் இருக்குதுன்னு சொல்லிருக்காங்க. அந்த புகார வச்சு உடனே தேவாவோட வீட்டுக்கு போன போலீஸ், முதல்ல தேவாவோட மனைவி இந்திராணி கிட்ட விசாரிச்சுருக்காங்க. அப்ப என் கணவர் காணாம போய், மூணு நாட்கள் ஆச்சுன்னு சொல்லிருக்காங்க இந்திராணி. அதுக்கு போலீஸ் நீங்க ஏன், கம்ப்ளைண்ட் கொடுக்கலன்னு கேட்க, இந்திராணி ஏதேதோ சொல்லி சமாளிச்சுருக்காங்க. இதனால இந்திராணி மேல சந்தேமடைஞ்ச போலீஸ், சம்பவத்தன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க. அப்ப தேவாவோட வீட்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்துட்டு போன காட்சி பதிவாகியிருந்துருக்கு.போலீஸோட விசாரணை ரொம்ப தீவிரமடைஞ்சத பாத்து பயந்துபோன இந்திராணி, மறுநாள் அவங்களே கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன்ல சரணடைஞ்சு, சார் நான் தான் என் கணவன் தேவாவ கொலை செஞ்சேன்னு சொல்லிருக்காங்க. இதனால அவங்கள கஸ்டடியில எடுத்த போலீஸ் தீவிர விசாரணையில் இறங்குனாங்க. மதுரைய சேந்த தேவா - இந்திராணி தம்பதி கோவை பொள்ளாச்சியில வசிச்சுட்டு இருக்காங்க. தேவா பெயிண்டிங் வேலை செஞ்சுட்டு இருந்தாரு. இந்த தம்பதிக்கு மூணு வயசுல ஒரு குழந்தை இருக்கு. கணவன், குழந்தைகளோட மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு இருந்தாங்க இந்திராணி. இதுக்கிடையில இந்திராணிக்கும் அவங்களோட சித்தப்பா முறையில உள்ள வினோத் குமாருக்கும் தகாத உறவு ஏற்பட்டிருக்கு. கணவன் வேலைக்கு போனதுக்கு அப்புறம், எந்நேரமும் வினோத் குமார் கூட பேசுறது, அவரு கூட வெளியில போறதுன்னு இருந்துருக்காங்க இந்திராணி.ஆனா, அடுத்த கொஞ்சம் நாட்களையே இந்த விஷயம் தேவாக்கு தெரியவந்துருக்கு. இதனால தேவா தன்னோட மனைவி இந்திராணிய கண்டிச்சுருக்காரு. என் கூட சந்தோஷமா தான வாழ்ந்துட்டு இருந்த, எதுக்கு உன் புத்தி இப்படி மாறிச்சு, நீ இந்த மாதிரி பண்ணிட்டு இருந்தனா நம்ம குடும்பத்துக்கு நல்லது கிடையாது, அதனால உன் சித்தப்பா கூட பழகுறத நிறுத்திக்கோன்னு கண்டிச்சுருக்காரு. அதுக்கப்புறம் இந்திராணி கிட்ட இருந்து செல்போன பிடுங்குன தேவா, அவங்கள வீட்ட விட்டு எங்கையும் வெளிய அனுப்பாமலும் வச்சுருந்தாரு. இதனால வினோத் குமார் கூட பேச முடியாம இந்திராணி, தவிச்சுட்டு இருந்தாங்க. தேவா உயிரோட இருக்குற வர்ற வினோத் குமாரோட சந்தோஷமா இருக்க முடியாதுன்னு நினைச்ச இந்திராணி, கள்ளக்காதலனோட சேந்து கணவன கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க... அதுக்கு காதலனும் ஓகே சொல்ல, இந்த கொலை திட்டத்துக்கு தன்னோட நண்பர்களையும் கூட சேத்துகிட்டாரு வினோத்குமார்.சம்பவத்தன்னைக்கு தேவா வீட்ல தூங்கிட்டு இருந்தாரு. அப்ப ஒரு ஆம்புலன்ஸ்ல தன்னோட நண்பர்கள கூப்டுட்டு தேவாவோட வீட்டுக்கு போன வினோத்குமார், தூங்கிட்டு இருந்த தேவாவ சரமாரியா வெட்டிருக்காங்க. இதுல நிலைகுலைஞ்ச தேவா சம்பவ இடத்துலையே துடிதுடிக்க உயிரிழந்துட்டாரு. அடுத்து சடலத்த அந்த ஆம்புலன்ஸ்ல வச்சு, அத கரூருக்கு கொண்டு வந்த கொலையாளிகள் சடலத்த தண்டவாளத்துல தூக்கி வீசிட்டாங்க. இதுக்கிடையில போலீஸோட விசாரணைக்கு பயந்து மனைவி இந்திராணி கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன்ல சரணடைஞ்சுட்டாங்க.