திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் கடந்த 23 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 6 கோடி ரூபாயை தாண்டியது. கடந்த 22 மற்றும் 23-ம் தேதிகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டதில், மொத்தம் 6 கோடியே 39 லட்சத்து 29 ஆயிரத்து 550 ரூபாயும், வெளிநாட்டு கரன்சிகள் 906 நோட்டுகளும், தங்கம் ஆயிரத்து 874 கிராமும், வெள்ளி 27 ஆயிரத்து 3 கிராமும் கிடைத்துள்ளன.