பாறையில் நிர்வாணகோலத்தில் உயிரிழந்து கிடந்த இளைஞர். தங்கையின் கணவர் உட்பட 4 பேர் சேர்ந்து இளைஞரை கொலை செய்த பயங்கரம். உறவினர்களே இளைஞரை அடித்துக் கொன்று பாறையில் போட்டது ஏன்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் பிடிபட்டார்களா?தீரன் பாண்டியனுக்கு அவரோட உறவுக்கார தம்பி நைட் 8 மணிக்கு போன் பண்ணிருக்கான். நாலுமுறை போன் பண்ணியும் எடுக்காத தீரன் பாண்டியன் அஞ்சாவது முறை போன அட்டெண்ட் பண்ணி, என்னைய சுப்ரமணியனும் அவரோட நண்பர்களும் கடத்தி வச்சிருக்காங்க, எப்படியாவது வந்து காப்பாத்துங்கனும் அழுதுருக்காரு.எந்த பகுதியில கடத்தி வச்சிருக்காங்க? யாரெல்லாம் கூட இருக்கானு கேக்குறதுக்குள்ள தீரன் பாண்டியனோட போன் கட் ஆகிருச்சு. அதனால, மறுபடியும் கூப்ட்ருக்காரு தீரன் பாண்டியனோட தம்பி. அப்போ, ஸ்விட்ச் ஆப்னு வந்துருக்குது. அடுத்து, தீரன் பாண்டியனோட உறவினர்கள் அன்னவாசல் போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்க. அதுக்குப்பிறகு வழக்குப்பதிவு பண்ணி, தீரன் பாண்டியன தேடுற வேலையில இறங்கிருக்காங்க போலீசார். இதுக்கு மத்தியில, இடையன்பாறை பக்கம் இயற்கை உபாதை கழிக்கப்போன கிராம மக்கள், ஒரு இளைஞர் நிர்வாணகோலத்துல சடலமா கெடக்குறதா போலீசுக்கு தகவல் குடுத்துருக்காங்க. தீரன் பாண்டியன் கடத்தப்பட்ருக்குறதா புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள எல்லா ஸ்டேஷன்களுக்கும் முன்கூட்டியே தகவல் குடுக்கப்பட்ருக்குறதால, தகவல் தெரிஞ்சி இடையன்பாறைக்கு வந்த அன்னவாசல் போலீசார், சடலத்த போட்டோ எடுத்து தீரன் பாண்டியனோட தம்பிக்கு அனுப்பிருக்காங்க.அப்பதான், இடையன்பாறையில சடலமா கெடந்தது தீரன் பாண்டியன் அப்டிங்குறது தெரியவந்தது. அதுக்குப்பிறகு தீரன் பாண்டியனோட ஊர்க்காரங்ககிட்டயும் உறவினர்கள்கிட்டயும் விசாரிச்சப்பதான் பல உண்மைகள் வெளியவந்துச்சு. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பக்கத்துல மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தீரன் பாண்டியன். இவரோட தங்கச்சிய சக்திவேலுங்குறவரு கல்யாணம் பண்ணிருக்காரு. வெளிநாட்டுல வேலை பாத்துட்டு இருந்த தீரன் பாண்டியன், சில மாசத்துக்கு முன்னால சொந்த ஊருக்கு வந்துருக்காரு. அதுக்குப்பிறகு, தன்னோட தங்கச்சிய பாக்குறதுக்காக அவங்க வீட்டுக்குப் போன தீரன் பாண்டியன், சக்திவேலோட அண்ணன் பாலசுப்ரமணியனோட மனைவிக்கிட்ட சாதாரணமா பேசிருக்காரு.அவங்ககிட்ட செல்போன் நம்பர் வாங்கின தீரன் பாண்டியன், தினமும் பேசுறது, வீடியோ கால் பண்றது, தங்கச்சிய பாக்க வர்றேன் அப்டிங்குறபேர்ல பாலசுப்ரமணியனோட மனைவிய பாக்குறதுனு இருந்துருக்காரு. இத கவனிச்ச, தீரன் பாண்டியனோட தங்கச்சி நான் உனக்கு தங்கச்சினா, பாலசுப்ரமணியனோட மனைவியும் உனக்கு தங்கச்சி தான், அதனால் அவங்ககிட்ட பேசிப்பழகுற வேலை வேண்டாம் கண்டிச்சிருக்காங்க.ஆனா, அத காது குடுத்து கேக்காத தீரன் பாண்டியனும், பாலசுப்ரமணியனோட மனைவியும் நெருங்கி பழகிருக்காங்க. இதனால, அவங்களோட தகாத உறவு ஊருக்கே தெரிஞ்சிடுச்சு. அடுத்து ஊர்ல பஞ்சாயத்து கூட்டி நியாயம் கேட்ருக்காரு பாலசுப்ரமணியன். அப்படியும் ரெண்டுபேரும் தகாத உறவை கைவிடுற மாதிரி தெரியல.அதுக்குப்பிறகு, மனைவிய டைவர்ஸ் பண்ண முடிவெடுத்துருக்காரு பாலசுப்ரமணியன். அதனால, பாலசுப்ரமணியன பிரிஞ்ச அவங்க மனைவி குழந்தைகள் ரெண்டுபேரையும் கணவர்கிட்ட விட்டுட்டு சென்னைக்கு போய் அங்க உள்ள ஒரு பிரைவேட் கம்பெனியில வேலைக்கு சேர்ந்துட்டாங்க. அது தீரன் பாண்டியனுக்கு இன்னும் வசதியா போச்சு.சென்னைக்குப்போய் பாலசுப்ரமணியனோட மனைவிகூட சுத்துறது, தங்குறதுனு இருந்துருக்காரு. அப்படி, ஒண்ணா சுத்துறப்ப போட்டோ எடுத்து அத பாலசுப்ரமணியனுக்கும், சக்திவேலுக்கும் அனுப்பிருக்காரு தீரன் பாண்டியன்.அதுவரைக்கும் டைவர்ஸ் பண்ணிட்டு விலகிடலாம்னு நினைச்ச பாலசுப்ரமணியன், அப்பதான் மிருகமாவே மாறிருக்காரு. உறவுமுறைமீறி ஊர் சுத்துறதே தப்பு, அதுல போட்டோக்களையும் அனுப்பி வெறுப்பேத்துற இவன இனி விடக்கூடாதுனு முடிவு பண்ணிருக்காரு பாலசுப்ரமணியன்.இதுக்கு மத்தியில தான் தானா வந்து சிக்கிருக்காரு தீரன் பாண்டியன். டாஸ்மாக் கடை பக்கத்துல நின்னு பாலசுப்ரமணியன், சக்திவல், நவீன், மதியழகன் நாலுபேரும் மது குடிச்சிட்டு இருந்துருக்காங்க.அப்போ, அங்க வந்த தீரன் பாண்டியன்கிட்ட மது குடிச்சிக்கிட்டே பிரச்சனைய பேசி முடிக்கலாம்னு சொல்லி நாலுபேரும் சேர்ந்து பைக்ல அழைச்சிட்டு போயிருக்காங்க.அதுக்குப்பிறகுதான், தீரன் பாண்டியனுக்கு அவரோட உறவுக்கார தம்பி ஒருத்தரு கால் பண்ணிருக்காரு. பாலசுப்ரமணியன் தன்னை கடத்திட்டா சொன்னதும் தீரன் பாண்டியனோட செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகிருக்குது. இடையன்பாறையில நிர்வாணகோலத்துல சடலமா கெடந்த தீரன் பாண்டியனோட உடம்புல 16 இடங்கள்ல காயங்கள் இருந்துருக்குது.அந்த காயங்கள்ல இருந்து வெளியேறுன ரத்தம்தான் தீரன் பாண்டியன் கட்டியிருந்த கைலிய ரத்தக்கறையா மாத்திருக்குது. அதோட, பைக்ல இருந்து தரதரனு இழுத்துட்டுப்போனா ஏற்படுற காயம் மாதிரி தீரன் பாண்டியனோட கால்ல உராய்வும் இருந்துருக்குது. ஆயுதத்தால தாக்கி, கழுத்த நெரிச்சி கொன்னுருக்கலாம்னு சொல்ற போலீசார் பாலசுப்ரமணியன், சக்திவேல், நவீன், மதியழகன் நாலுபேரும் சிக்கின தான் தீரன் பாண்டியனை எப்படி கொன்னாங்கனு முழுமையா தெரியவரும்ன்னும் சொல்லி இருக்காங்க...