வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு விழாவையொட்டி சிம்மகுளம் சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமையன்று நள்ளிரவு திறக்கப்படும் இந்த குளத்தில் நீராடினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளதால் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து காத்திருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் சிம்ம குளத்தில் நீராடி வழிபாடு செய்தனர். முன்னதாக இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி பூஜையை தொடங்கி வைக்க, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ பி நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.