தொடர்ந்து, 10ஆவது நாளாக இண்டிகோவின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான பணி நேர வரம்பு, பணியாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட குளறுபடிகளால், இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் 24 புறப்பாடு, 12 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமான விமான கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.