நெல்லை தீயணைப்பு துறை மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் 2 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்த நிலையில், சோதனைக்கு முதல் நாள் நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் அலுவலகத்திற்கு சென்று வந்த சிசிடிவி காட்சி வெளியாகியது. தீயணைப்பு துறை மண்டல துணை இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுந்த லஞ்ச புகார் தொடர்பாக சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.