நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இறைச்சிக் கடை ஊழியரை போதை ஆசாமி தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆண்டகலூர்கேட் பகுதியில் உள்ள கடைக்கு மதுபோதையில் வந்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 2 இளைஞர்கள், 1 கிலோ கோழி இறைச்சி கேட்டு ரசீதை ஊழியர் தரனிடம் கொடுத்துள்ளனர். பிறகு, அவர் கறி வெட்டிக் கொண்டிருந்தபோது சரியாக வெட்டாததாகக் கூறி, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.