வழக்குகளில் நீண்ட நாட்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இது தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி அமர்வில், ஏற்கனவே இது போன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக தனிநீதிபதி, சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்ட டிஜிபிக்கு பாராட்டு தெரிவித்த நீதிமன்றம், அவரது சுற்றறிக்கையால் எந்த பயனும் இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தது.