மதுரை மாநாட்டு மேடையில் இருந்த தந்தை பெரியார் படம் அகற்றப்பட்டதற்கு தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் உள்ள தலைவர்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக அதிமுகவை அழித்து வருகின்றனர் என்றும் கூட்டணி கட்சியின் பிரதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் கூறிய அவர், 25 வருட அரசியலில் உள்ள திருமாவளவன் அவர் சார்ந்துள்ள மக்களுக்கு இதுவரை ஒரு கல்லூரியோ, பள்ளியோ கட்டி கொடுக்க முடிந்ததா என கேள்வியெழுப்பியுள்ளார். தவெக செயல்வீரர்கள் கூட்டம்மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கலந்துகொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து 234 தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டம் இன்று முதல் நடைபெற்று வருவதாகவும் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை தேர்தலில் களப்பணி ஆற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பெரியார் படம் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரையில் பாரதப் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் இருந்த தந்தை பெரியார் படம் அகற்றப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், மதுரையில் மாநாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள அனைத்து பதாகைகளிலும் அதிமுக போஸ்டர்கள் இல்லாமல் பாஜக போஸ்டர் போல தெரிகிறது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா தலைவர்கள் படம் இல்லாமல் பாஜக தாங்கிய போஸ்டர்களாகவே உள்ளதாக கூறினார்.அதிமுகவையே அழிக்கின்றனர்எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவில் பெரியார் படத்தை முகப்பில் வைக்க முடியாத சூழல் வருத்தத்திற்குரியது என தெரிவித்த அவர், அதிமுகவில் தலைவர்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக அதிமுகவையே அழித்து வருகின்றனர் என காட்டமாக தெரிவித்தார், இந்த தேர்தல் களத்தில் தவெக வருகையால் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் குழப்பத்தில் உள்ளதாகவும், கூட்டணியில் உள்ள கட்சியின் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் சார்ந்த கட்சியினருக்கும் மக்களுக்கும் தேவையானவற்றை செய்ய முடியும் என கூறினார். கூட்டணி கட்சியினருக்கு மரியாதை இல்லை25 ஆண்டு கால அரசியலில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர் சார்ந்த கட்சினருக்கோ தொண்டர்களுக்கு ஒரு கல்லூரி அல்லது பள்ளிக்கூடமோ கட்டித்தர முடிந்ததா? அவருக்கு ஆட்சியில் பங்கோ அல்லது அமைச்சர் பதவியோ வழங்கினால் மட்டுமே அவர் சார்ந்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆனால் திமுகவில் கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு, கட்சியினருக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என கூட்டணி கட்சியினரே குற்றம் சாட்டி வருகின்றனர் என நிர்மல் குமார் தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆளுமை மிக்க தலைவராக விஜய் இருப்பதாகவும் தமிழகத்தில் இது போன்ற ஒரு எழுச்சி எந்த ஒரு தலைவருக்கும் இருந்ததில்லை என தெரிவித்த நிர்மல் குமார், திமுக தலைவருக்கு அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களை திருப்திபடுத்தவே நேரம் போதவில்லை என கூறினார். ,electione2026, Newstamil,Newstamil24x7live, Newstamildigital24x7, நியூஸ்தமிழ்24x7, நியூஸ்தமிழ், Newstamil24x7channel, Livetamilnews24x7, Tamilnews