அமைதியாக இருக்கும் தமிழகத்தில் வன்முறையை கிளப்புவது சீமானுக்கு அழகா? என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமான் பெரியார் குறித்து கருத்தியல் ரீதியாக மோதிப்பார்க்க வேண்டும் என்றார்.