தமிழக மக்களின் கோரிக்கையை பிரதமரிடம் நேரடியாக சொல்லுகின்ற ஒரு வாய்ப்பு இருந்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை நிராகரிப்பதன் மூலம், தமிழ்நாட்டு மக்களின் நலனை புறக்கணிப்பதாக, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவைக்கு வரும் பிரதமரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈகோ காரணமாக நேரில் சந்திப்பதை தவிர்ப்பதாக தெரிவித்தார்.பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருவது மகிழ்ச்சியானது, பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்து, அங்கு முதலமைச்சர் இன்னும் பதவியேற்காமல் உள்ள நிலையில் வந்துள்ளார் என்றும் தமிழிசை கூறினார். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை தயாரித்து அனுப்பிய அறிக்கை தவறாக இருக்கிறது, அதைத்தான் இப்போது மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம் கேட்டிருக்கிறது, மெட்ரோவை பற்றி தவறான தகவலை பரவ விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தமிழிசை கூறினார்.