திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக்குவது திமுகதான் எனவும், அனுமதி அளித்திருந்தால் எல்லாம் அமைதியாக நடந்து முடிந்திருக்கும் எனவும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் மூலவர் ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு திரும்பிய அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது , அமைச்சர் சேகர்பாபு நினைத்தபடிதான் இந்து கோவிலுக்கு ஆகம விதிகள் நடைபெற வேண்டும் என்பது போல நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார்.