தமிழகத்தின் நிதிநிலையை தான் உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிடவில்லை என்றும், தமிழகத்தின் கடன் நிலை குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலை மட்டுமே தான் கூறியதாகவும் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் அளித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் அரசியல் சக்தியாக உருவாகி விட்டதாக உறுதிபட தெரிவித்தார். தான் விஜயை சந்தித்தது உண்மைதான் என்றும், தவெக உடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.