சென்னை பெருங்களத்தூரில் பூட்டை உடைத்து வீடு புகுந்து 5 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுபெருங்களத்தூர் சீனிவாச நகரை சேர்ந்த மோகன் கடந்த 5ஆம் தேதி வேலைக்கு சென்ற பிறகு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு நகை திருட்டு போய் இருந்தது. இருவர் திருட்டில் ஈடுபட்டது சிசிடிவி பதிவின் மூலம் தெரியவந்ததையடுத்து தணிகை வேல் என்பவரை கைது செய்த பீர்க்கன்காரணை போலீசார் 5 சவரன் நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரான சாம்ராஜ் என்பவர் ஏற்கனவே சேலையூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சிறையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.