காலி மதுபாட்டிலை திரும்பபெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினர் சென்னை புதுப்பேட்டையிலிருந்து கோட்டையை நோக்கி பேரணியாக சென்றனர். அத்திட்டத்தின் மூலம் வேலைப்பளுவை டாஸ்மாக் ஊழியர்கள் மீது திணிப்பதாக குற்றம்சாட்டியதோடு, மாற்றுத்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஊழியர்களை மிரட்டி அத்திட்டத்தை செயல்படுத்த கூறுவதாகவும் சாடினர். இதையும் பாருங்கள் - மதுரையில் இந்த ஆண்டில் நடக்கும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி