கும்பகோணத்தை அடுத்த திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத முதல் நாளில் உலக நன்மை வேண்டி கூட்டு வழிபாடு நடைபெற்றது. அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட மலர்களை கொண்டு புஷ்ப அபிஷேகமும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. அதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.