திருமண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறத்தில் அமைந்துள்ள மலையில் சரிந்த பகுதிகளை உயர்நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கனமழையின் காரணமாக கோயிலின் பின்புறத்தில் உள்ள மலையில் மண் மற்றும் பாறை சரிந்ததில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மலையில் மண் சரிந்த பகுதிகளை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் ஆய்வு செய்தார். அப்போது, மலையையொட்டி அடிவாரத்தில் உள்ள மக்கள் மாற்று இடத்திற்கு செல்ல விரும்பும் பட்சத்தில் மாற்று இடத்தில் வீடுகள் கட்டித்தர அரசு தயாராக இருப்பதாக ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நீதிபதியிடம் தெரிவித்தார்