திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே இளைஞரின் காதில் புதைந்த கம்மலை, காதுக்கு சேதம் இல்லாமல் தீயணைப்புத் துறையினர் அகற்றினர். சிங்கம்பாறை பகுதியை சேர்ந்த நிஷாந்தை மாடு ஒன்று தாக்கியபோது அவர் காதில் அணிந்திருந்த ஸ்டீல் கம்மல் வளைந்து காதுக்குள் புதைந்ததாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் வலியால் துடித்த நிஷாந்த் காலையில் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலையத்திற்கு வந்து கம்மலை அகற்றும்படி கேட்டுள்ளார். இதன்பேரில், நிலைய அலுவலர் சூசை தலைமையிலான தீயணைப்புத் துறையினர், கட்டர் கருவி மூலமாக லாபகமாக நிஷாந்த் காதில் சிக்கியிருந்த கம்மலை அகற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். தீயணைப்புத் துறையினரின் இந்த செயலை அப்பகுதியினர் பாராட்டினர்.