Also Watch
Read this
சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் காரைக்குடி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்களில் தீயைப் பற்ற வைத்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை விசாரணை
காரைக்குடி, சுப்பிரமணியபுரம் முதல் தெருவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தை இன்று மார்ச் 11ஆம் தேதி, காலை திறக்க வந்த ஊழியர்கள், குண்டு வீசப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து, காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி மற்றும் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்தை, வந்து பார்வையிட்டனர். இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினார்.

கேமரா உடைப்பு
எம்பி அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா உடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அருகே உள்ள கட்டடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காரைக்குடி காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved