தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். தரைமட்டப் பாலம் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்ததை பார்வையிட்ட அவரிடம், புதிய பாலத்தை விரைவில் சீரமைத்து தரவேண்டும் எனவும், ஆற்றின் கரைகள் மற்றும் இணைப்பு சாலைகளில் தடுப்புச் சுவர் கட்டித் தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.