விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.வடக்கு வாசல் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவர் அம்மன் எழுந்தருளி கொட்டும் மழையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடை பிடித்து கொண்டு அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.