திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதம், வெள்ளி இந்திர விமானங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.