மதுரையில் நகை வியாபாரியை காரில் கடத்தி 2 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரத்தை சேர்ந்த நகை வியாபாரி பாலசுப்பிரமணியன், சென்னையில் நகை வாங்கி கொண்டு மதுரைக்கு திரும்பிய போது, மதுரை ரயில் நிலையத்தில் வைத்து 5 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்று நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.