சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டது. ஆந்திரா - தமிழ்நாடு நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 15 டிஎம்சி கிருஷ்ணா நதிநீர் வழங்கப்பட வேண்டும். அதன்படி கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 1300 கன அடி வரை நீர் திறக்கப்பட்டு, தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தாமரை குப்பம் ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது. பின்னர் 220 கன அடி வரை நீர்திறப்பு குறைக்கப்பட்ட நிலையில், தற்போது கனமழையால் பூண்டி ஏரி நிரம்பி வழிந்ததால் நீர்திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.