சென்னை, திருவான்மியூர்... உடுக்கை அடித்துக்கொண்டே செய்வினை இருப்பதாக கூறிய குடுகுடுப்பைக்காரர். பரிகாரம் ஏதாவது உண்டா சாமி என பதறியபடியே கேட்ட பெண். சுடுகாட்டில் வைத்து பூஜை செய்துவிட்டு வருவதாக 5 சவரன் நகைகளை சுருட்டிக்கொண்டு குடுகுடுப்பைக்காரர் ஓட்டம். பட்டப்பகலில் பெண்ணுக்கு விபூதி அடித்த குடுகுடுப்பைக்காரர் சிக்கினாரா? பின்னணி என்ன?காலையில 10 மணி இருக்கும். கணவனை ஆபிஸ் அனுப்பிட்டு பிள்ளைகளையும் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, சென்னை திருவான்மியூர் மேட்டு தெருவுல உள்ள தன்னோட வீட்ல சும்மா உக்காந்துட்டு இருந்துருக்காங்க மஞ்சு. அப்போ வீட்டுக்கு வெளிய நல்ல காலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குதுனு ஒரு குடுகுடுப்பைக்காரரோட சத்தம் கேட்ருக்குது. உடுக்கை அடிச்சிக்கிட்டே பக்கத்து வீடுகள்ல நல்லகாலம் பொறக்குதுனு சொன்ன குடுகுடுப்பைக்காரர், மஞ்சு வீட்டுக்கு வந்ததும் உங்க வீட்டுக்கு செய்வினை இருக்குதுனு சொல்லிருக்காரு.அதக்கேட்டு அதிர்ச்சியான மஞ்சு, என்ன சொல்றீங்க சாமினு பதற்றத்தோடயே அந்த குடுகுடுப்பைக்காரர்கிட்ட கேட்ருக்காங்க. அதுக்கு ஆமா, உன் குடும்பத்துக்கு செய்வினை வச்சிருக்காங்க, அதனால தான் உன் குடும்பமே முன்னேறாம இருக்குது, அந்த செய்வினையால தான் உன் கணவருக்கும், பிள்ளைகளோட உயிருக்கும் ஆபத்து இருக்கு தாயினு குண்ட தூக்கி போட்ருக்காரு குடுகுடுப்பைக்காரர். அதக்கேட்டு, மேலும் ஷாக் ஆன மஞ்சு, வழக்கமா மாய மந்திரத்த நம்புற எல்லாரும் கேக்குற பாரம்பரிய கேள்வியான, "அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா சாமி"னு கேட்ருக்காங்க. இந்த கேள்விய தான் அந்த குடுகுடுப்பைக்காரருமே எதிர்பாத்துருப்பாரு. நினைச்ச மாதிரியே மஞ்சுவும் பரிகாரத்த கேக்க, செய்வினையை நீக்க ரூபாய் ஒரு லட்சம் செலவாகும்னு சொல்லிருக்காரு குடுகுடுப்பைக்காரர்.அய்யோ, சாமி அவ்ளோ பணம் என்கிட்ட இல்ல சாமினு மஞ்சு பரிதாபமாக குரலை தாழ்த்த, இருக்குற பணத்த குடும்மா, உங்க குடும்பம் நல்லா இருக்கணும், அதனால பணத்த முக்கியமா நினைக்காம செய்வினைய எடுக்குறேனு குடுகுடுப்பைக்காரர் நல்லவன்போல பேசிருக்காரு.இத நம்புன மஞ்சுவும், பீரோவுல இருந்து 10 ஆயிரத்த எடுத்து வந்து குடுகுடுப்பைக்காரர் கிட்ட குடுத்துருக்காங்க. ஒரு லட்சத்துல பத்தோ இருபதோ கொறஞ்சா பரவால்ல. ஆனா வெறும் பத்தாயிரத்த மஞ்சு குடுத்ததும் வெக்ஸ் ஆன குடுகுடுப்பைக்காரர், நீ அணிஞ்சிருக்குற நகைகளை குடு தாயி, சுடுகாட்டுல வச்சி பூஜை பண்ணி செய்வினைய விரட்டிட்டு, மறுபடியும் வந்து நகைகளை தர்றேனு சொல்லிருக்காரு.அது எப்படி சாமினு மஞ்சு யோசிக்க, அவங்க கையில ஒரு கயிறை கட்டி உடுக்கையடிச்சிருக்காரு குடுகுடுப்பைக்காரர். கையில கட்டப்பட்ருந்த கயிறும், உடுக்கை சத்தமும் மஞ்சுவை தன்னிலை மறக்க வச்சதால, அஞ்சு சவரன் நகைகளை கழற்றி குடுத்துருக்காங்க.. அந்த நகைகளை வாங்குன குடுகுடுப்பைக்காரர் சுடுகாட்டுக்கு போயிட்டு வருவாருனு எதிர்பாத்துட்டு இருந்துருக்காங்க மஞ்சு. ஆனா, நேரந்தான் போனதே தவிர குடுகுடுப்பைக்காரர் வரவே இல்ல.இதுக்கு மத்தியில, வழக்கம்போல ஆபிஸ் முடிஞ்சி சாயந்தரம் வீட்டுக்கு வந்த மஞ்சுவோட கணவர் கையில போட்ருந்த வளையலை எங்க? கழுத்துல இருந்த தாலிச்செயினை எங்கனு கேட்ருக்காரு. அப்பதான், குடுகுடுப்பைக்காரர் வந்து செய்வினை புருடா விட்டதுல இருந்து கையில கயிற கட்டி நகைகளை வாங்கிட்டு போனது வரைக்கும் நடந்த விவரத்த சொல்லிருக்காங்க.இதக்கேட்டு அதிர்ச்சியான கணவர், திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்க. அதுக்குப்பிறகு வழக்குப்பதிவு பண்ணி விசாரணையில இறங்குன போலீசார், மஞ்சுவோட வீட்டுல இருந்து மெயின்ரோடு வரை உள்ள சுமார் 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு பண்ணிருக்காங்க.அதுலதான், தன்னோட வீட்டுக்கு வந்த குடுகுடுப்பைக்காரரோட அடையாளத்த காட்டிருக்காங்க மஞ்சு. அதுக்குப்பிறகு, அந்த போட்டோவை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னையில உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி விசாரிச்சப்ப, மஞ்சுவுக்கு விபூதி அடிச்சது காஞ்சிபுரத்தை சேர்ந்த பாலமுரளிங்குறது தெரிய வந்துச்சு.50 வயசான பாலமுரளி, கடந்த மூணு மாசமா கொட்டிவாக்கத்துல வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கி இருக்குறதும், பகல்நேரத்துல தனியா வீட்ல இருக்குற பெண்களை குறிவச்சி செய்வினை தூண்டில் போட்டு நகை, பணத்த பறிக்குறதும் தெரியவந்துச்சு.. கொட்டிவாக்கம்போய் பாலமுரளிய அரெஸ்ட் பண்ணின போலீசார், அவர்கிட்ட இருந்து அஞ்சு சவரன் நகைகளை மீட்டு மஞ்சுக்கிட்ட குடுத்துருக்காங்க.