ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே இளைஞர்களுக்கு ஏற்பட்ட தகராறில் இருவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்வத்தில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டாஸ் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கைது செய்யப்பட்ட பிரேம், வெங்கடேசன்,மணிகண்டன், நவீன், மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்த நிலையில் ஆட்சியர் சந்திரகலா அதற்கு உத்தரவிட்டார்.