சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், காரில் குட்கா பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.