சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே சென்றாய பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வாழவந்தி கிராமத்தில் உள்ள சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஐந்து கால பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து அனைத்து சன்னிதிகள் மற்றும் கோபுரங்கள் மீது புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.