மயிலாடுதுறை மாவட்டம் தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற லட்சதீப திருவிழாவில் திரளான பொதுமக்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பொதுமக்கள் ஏற்றிய அகல் விளக்குகளால் கோவில் ஜொலிக்க, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.