தொடர் மழை காரணமாக சேலம் தேவேந்திரபுரம் பகுதிக்கு செல்லக்கூடிய தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஏற்காடு மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தேவேந்திரபுரம் பகுதியில் இருந்து பொன்னம்மாபேட்டைக்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.