புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விடுதியில் லேப்டாப் திருடிய இளைஞரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் லேப்டாப்பை திருடியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் அவர் கைவரிசை காட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.