கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் மலையில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மாவிடந்தல் உட்பட 18 கிராமங்களைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் ஊதுபத்தி, சாம்பிராணி, வெல்லம் உள்ளிட்டவற்றையும், நினைத்த காரியம் நிறைவேறியதால் ஆடு, கோழி விடுதல், மொட்டை அடித்தல் போன்றவற்றையும் நேர்த்திக்கடனாக செலுத்தினர்.