Also Watch
Read this
By: Manigandan Raja

ஆலோசனை கூட்டம் :
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி அதிமுக அலுவலகத்தில் சூளகிரி வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்
நடைப்பெற்றது.
ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை
வழங்கினர்.
அப்போது அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே பி முனுசாமி அவர்கள் பேசுகையில்: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக குலவிளக்கு என்கிற பெயரில் குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என அதிமுக தேர்தலில் அறிவிக்கப்பட்டது.. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் வாக்குறுதிகள் மக்களை சென்றடையவில்லை.
ஆனால், திமுக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது அனைவரிடம் சென்றடைந்ததால் 1% வாக்குகள் மாறி, 3 லட்சம் வாக்குகளில் ஆட்சியை பறிக்கொடுத்தோம் என்பதால்
தேர்தல் தேதி வெளியான பிறகு தான் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும், இம்முறை வாக்குறுதிகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக தேர்தலுக்கு முன்பே வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருப்பதால்.
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வீடு வீடாக அதிமுக தேர்தல் அறிக்கைகளை எடுத்துக்கூற வேண்டுமென கேட்டுக்கொண்டார் அதன் பின்பு வாக்குச்சாவடிகள் தோறும் விநியோகிக்க அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டறிக்கைகளை நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
அப்போது அதிமுக மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வி,எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயபிரகாஷ், இளைஞர் மற்றும்
இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராமு உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved