சென்னை கலைவாணர் அரங்கில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புற நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மணி ஒலித்து தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடுதல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.