செங்கல்பட்டில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிமம் இல்லாமல் இயங்கிய 16 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 15 ஆட்டோக்களுக்கு 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் ஷேர் ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், ஆர்டிஓ இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.